பிரதிபிம்பம் 📸
பனிப்பொழிவுடன் காலைப்புலர்வு..
புத்தம் புதிய ஊர்..
குளிர்ச்சி கண்ணாடியுடன்
புகைப்பட கருவியோடு
இயற்கையை ரசித்தபடி
நடைபயின்றேன்…
அங்கோர் அற்புத காட்சி..
மரக்கிளையில் கண்ணாடியை
பொருத்தி வைத்து விட்டு
நினைவுகளை நிறமலர செய்யும்..,
இயற்கையை இயல்பாக காட்சிப்படம் பிடிக்கும்..,
செயற்கையின் சீற்றத்தை சித்தரிக்கும்..,
அழகியலை அழகோவியமாய் தீட்டும்
அற்புத கலை புகைப்பட கலையை
புகைப்பட கலைஞனின் வண்ணத்தில் பிரதிபிம்பம் எடுத்தேன்…
பளிச் எனும் ஒளி
கிளிக் எனும் இசை
புகைப்பட கருவியை மிஞ்சிய நிழல் பெட்டகம்
இவ்வையகத்தில் வேறு உண்டோ…?
இமை இணைக்காது
ஆசை தீர நிழற்படங்களை
எடுத்த பின் திரும்பினேன்..
கண்ணாடி பனிநீரோடு ஜொலித்தது..
அதன் பிரதிபிம்பத்தை
ஒளிப்படமாக சேமித்தேன்…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)