புள்ளினமே உன் மெல்லிசை கேட்டே
இழந்தேன் என் வசமே… உடலில் மஞ்சள்
ஆடை போர்த்திட்ட உன் கருப்பு நிறம்
மட்டுமா காணக் கவின் மிகு
காட்சி…காதில் தேன் ஊற்றாய்ப்
பாய்ந்திடும் உன் கானம் என்னென்று
சொல்ல.., வார்த்தைகள் தேடியே களைத்தேன்
எனதருமை மாங்குயிலே.. கரம் பிடித்து
கலைஞர்கள் இன்னிசை மழை பொழிந்திடும்
‘மை’க்கும் கரம் ஏறிட வெட்குமே….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: புள்ளினமே
previous post