புவிதனிலே உன் வருகை துவங்கி பல மில்லியன் வருடங்களாச்சு!
நீரிலும் நிலத்திலும் வாழ்வாய்,
ஆனாலும்
நெடும்புனலுள் நீயே ராஜா-ஆம்
நீரே உன் வெற்றியின் கோட்டை.
“சோம்பேறியாக இருந்து விட்டாக்க
சோறு கிடைக்காது தம்பி”—இது
புதுமைப்பித்தனின் வரிகள்- ஆனால்
இரை நாடி நீ நகர்வதில்லை,
உனைநாடி வரும் இரையை
நீ விடுவதில்லை, ஏன் அந்த
ஆதி சங்கரரும் உன்னாலே
துறவறம் பூண்டார் என்கிறதே வரலாறு!
ஆனால்,
மனிதன் உன்னையாவது விட்டுவைத்தானா?
நீயாவது உன் பசிக்கு வேட்டையாடுகிறாய்—மனிதனோ
உன்னைப் புசிக்கவும், உன் தோலை
உரிக்கவும் உன்னைக் கொல்கிறான்,
பணப்பையாக,காலணியாக,இடுப்புவாராக,பல நோய்களுக்கு மருந்தாக..
மனிதனுக்கு உதவும் உன்னை,
அடுத்தவர் உழைப்பில் சுகிக்கும்
எண்ணமில்லா தூய்மையான
உன்னை எங்கனம் முதலாளித்துவத்துக்கு
ஒப்பீடு செய்ய முடியும்?!
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)