பூமிக்குள்ள நீரை வைச்சான்
தேங்காயிலே தேக்கி வைச்சான்
பூமி நீரு வத்தி போச்சு
சுற்று சூழல் வெப்பமாச்சு
தண்ணீர் குடம் வத்தி போனா
சிசு வளர்ச்சி கெட்டு போகும்
தேங்காய்க்குள்ளே தண்ணி வத்த
தேங்காய் நீரோ மஞ்சளாச்சு
கொழுப்பு சத்து கூடிப் போச்சு
ஒத்த சில்லு வாங்கிய தன்று
மொத்த தேங்காய் பத்தல இன்று
தேங்காய்க்கு உள்ளே தேரை அன்று
தேராத தேங்காயிலே சட்னி இன்று
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)