தலைப்பு: பொய்மை பிம்பம்
குழி ஆடி குவி ஆடி
கண் ஆடியாய்
விழி கோண
வேறுபாடு நீக்கும்
விழி சொல்லும்
உண்மை உலகறியாமல்
திரையிட்டு மறைக்கும்
மழையில் மட்டுமல்ல
கண்ஆடி அணிந்து
கரைகின்ற போது
உன் சோகம் பிறர்
அறியாமல் தடுக்கும்
உண்மை உலகறியாமல்
திரையிட்டு தடுத்து
பொய் பிம்பம்
உலகறிய செய்யும்
இழி தொழில் எதற்கு
என்று மரக்கிளையில்
தூக்கிட்டு தொங்கும்
கண்ணாடி
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)