மனது சொல்லியது…
கனவுகள் மெய்ப்பட,
கடினமாய் உழை!
கண்களில் பிம்பமான காட்சிகள்
கண்களுக்குப் புலனாகும்.
நீ நினைத்தால் !…….
எந்த நிழலும் நிஜமாகும்!
ஆம்……
இளம் பிராயத்துக்கனவு,
இன்று நிறைவேறியது!
பம்பரம் தொலைந்து விட்டால்,
பதைபதைத்து வாழ்வே முடிந்தது..
என்று எண்ணிய காலங்கள்!
கிழிந்து ஒட்டுப்போட்ட பள்ளிச்சீருடை!…..
அவதாரம் எடுப்பதென்னவோ
தீபாவளி அன்றுதான்.
ஆம்……
வறுமையின் பிடியில் வாழ்க்கை!
மிட்டாய் வாங்கக் கொடுத்த காச,
மிச்சம் பிடித்துப் பார்ப்போம் சினிமா!
அப்பப் பிடிச்ச ஆசைதான்,
அழகான குளிர்க் கண்ணாடி!
அசலப் பார்த்து அசந்து போனேன்!
அந்தக் காச சேர்த்து வச்சா,
அரைவயிற்றுக் கஞ்சிக்காகும்!
ஆனா ஆசை மட்டும் குறையல!
ஆவேசமாப் படிச்சேன்,
முதல் இடத்தப் பிடிச்சேன்!
முழுமூச்சா உழச்சேன்!
ஆனேனே நானும் பட்டதாரி,
ஆனா ஆசை மட்டும் குறையல!
இதோ முதல் சம்பளத்தில்
என் குளிர் கண்ணாடி!
ஊர்க்கோடி கருப்பசாமிக்கு
போட்டேன் ஒரு பூசை!
ஊதக்காத்து வீச,
கொட்டும்பனியில,
எங்க வீட்டு வேலியில,
தொங்க விட்டு எடுத்தேனே
அழகிய புகைப்படம்.
அதிகாலைப் பனியில்
அழகு சொட்ட சொட்ட ,
என் குளிர் கண்ணாடி!
இனிமே இதுதான்
என்னோட “வாட்ஸப் டிபி”
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)