மழைத்துளிகள் இதழ் வருடும்
மங்கை இவள் இதயம் குளிரும்
வானம் பொழியும் நீர் வெள்ளம்
கன்னியவள் கரம் கூப்பும்.
நீரோட்டம் நெஞ்சம் நனைக்க,
நிம்மதியில் கண்கள் மூட,
இயற்கையின் இசையில் லயிக்க
இவள் முகத்தில் புன்னகை பூக்க.
எண்ணங்கள் யாவும் அடங்க
இறைவனை மனதில் ஏங்க
மன அமைதி இதயம் முழுக்க
மழையின் சங்கீதம் இவள் செவி நோக்கம்.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: மழைத்துளிகள்
previous post