மழை பொழியும் நேரம்,
மனதில் ஒரு சுகமான பாரம்.
கண்களுக்கு விருந்தாய் பூக்கள்,
கண்ணாடிக்குப் பின்னால் காட்சிகள்.
துளிகள் துளிகளாய் ஒழுகி,
உலகை புதிதாய் உருக்கி.
ரோஜா மலர்களின் மென்மை,
நினைவூட்டும் அன்பின் உண்மை.
ஒவ்வொரு இதழும் ஒரு ரகசியம்,
மழையின் சங்கீதம் மனதிற்கு அவசியம்.
இந்தக் கணத்தின் அழகு,
என்றும் மறையாத ஒரு பொக்கிஷம்.
இ.டி.ஹேமா மாலினி.
படம் பார்த்து கவி: மழை
previous post