மாங்குயில் ஒன்று
பாட்டு பாட வந்தது…
சின்னஞ்சிறு ஈக்கள்
தலையாட்டி ரசித்தது…
இன்னிசை காற்றில்
பரவியது…
வர்ணஜாலம்
பின்னணியில் சேர்த்தது…
தூரிகை தீட்டிய
ஓவியம் அழகாய் ஜொலித்தது…
இம்பிரஷனிசத்தின்
சாயலில் மஞ்சள் பறவை.
பாடி முடித்ததும்
பரவசம் எங்கும்…
இயற்கையின் கீதம்
இதுவல்லவோ.
திவ்யாஸ்ரீதர்
படம் பார்த்து கவி: மாங்குயில்
previous post