மார்கழி மாதம்
அதிகாலை நேரம்
சிகரத்தின் சீதோதனம்
ரோஜா இதழ் மீது
தேன் உண்ட தேனீ
மதி மயங்கி கிடக்க
ரோஜா இதழ்
குவித்து அணைக்க
இதழ் மூடிய
மலருக்குள்
மகரந்தச்சேர்க்கை
கனியாய் பருவம் ஏற்க
கனிக்கு உருவம் கொடுக்க
கடவுளுக்கும் குழப்பம்
பார்வையாலே
ஸ்பரிசம் கொள்ளும்
செஞ்சிவப்பு வண்ணமுடன்
கூர் வடிவம் தானே
இச்சை உண்டு பண்ணும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)