மெல்ல ஏறும் விஷம்
இதுவரை காணாத தேசமது
இரும்பாலான துருப்பிடித்த
இதயம் காணத் துடிக்கும் பூமியது
வியர்வைத் துளியில் மின்னிடும்
ஏராளமான நட்சத்திரங்கள் அங்குண்டு
நிலாச் சோற்றை கூட
அந்த நிலவிலேயே உண்ணும்
பாக்கியத்தை பெறலாம்
பள்ள மேடு வாழ்க்கையது
புரிய வைக்கும் புதிர்கள் நிறைந்த
போதிமரம் இல்லாத புத்த மடம் அது
மனிதம் தொலைத்து
புனிதம் கடந்து
மாயநதியில் மூழ்கி
மூச்சடக்கி முத்தெடுத்து
முக்தியடைந்தால்
முற்றுப் பெறும் சொர்க்கமது
புத்தனுக்கு கூட ஆசை வரும்??
போதிமரத்துக்கு எப்படி வரும்??
கண் கொடுத்துப் பார்
கடவுளே
அவள் ஒற்றைத்துளி பார்வையில்
மெல்ல ஏறும் விஷம்!!
-நௌஷாத் கான்.லி –
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)