ரயில் பயணம்
ரயில் பயணம் இனிமையானது
ஜன்னல் ஓர இருக்கையில்
அமர்ந்து மேகமும் வானமும் பூமியும் ஆறுகளும் ஓடைகளும் மலைகளும் காடுகளும் கட்டிடங்களும் மின் கம்பங்களும்
ஆலய கோபுரங்களும்
நம்மோடு பயணிக்கும்
அழகே அழகுதான்
ரயில் நட்பு இறங்க வேண்டிய
நிலையத்தோடு முடியாமல்
தொடர்வதும் உண்டு
ரயில் சிநேகிதி
பேச்சுத் துணையோடு
நின்று விடாமல்
வாழ்க்கைத் துணையாக
மாறிய கதைகளும் உண்டு
எங்கள் நீராவி வண்டிக்கு
இணையாகுமா உங்கள்
வந்தே பாரத் .
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)