வார்த்தை எனும் வாளாலே
வடுவான வாழ்க்கை
பிளவு பட்ட தக்காளியாய்
இரண்டு பட்டு போகும்
சினம் சிகரம் தொட
வாய் வந்த வார்த்தை
இருமுனை கத்தியாய் பாயும்
மௌனம் எனும் மருந்தாலே
சினம் எனும் கத்தியின்
கூர் மழுங்கி போகும்
வார்த்தைக்கு உயிர் மாய்க்கும்
வழு உண்டு என்றால்
வாய் தானே வாளை விட
கூர்மையாய் இருக்கும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)