விவரம் அறியாது முடிவுகளில் வேகமெடுக்கும் போதிலும்…
தவறான முடிவினால் சமயங்களில் தடுக்கிவிழ நேரிடும் போதிலும்…
உறுதியாய் வலிமையாய்
கட்டி அணைத்து
வேகம் தணித்து
நிலைப்பாட்டு இருக்கையில்
இழுத்து அமர்த்தி
ஆசுவாசப்படுத்துகிறது
“நிதானம் கண்ணா”
என்ற அப்பாவின் வார்த்தை என் வாழ்விருக்கையின் வார்ப்பட்டையாய்!
புனிதா பார்த்திபன்