விழிகளுக்கு வண்ணமாகும் நீண்டெழுந்த கட்டிடங்கள்
வாழும் வழியானதிது வளியின் வழித்தடத்தை உடைந்தெரிந்து உருவானது ஊருமறியுமோ!
சுதந்திர அடையாளமாய் பேர் கொண்ட பாவப்பறவைகளின்
போர்க்கொடியறியா பேதைமை போதை மனிதத்திற்கு ஏதுவானதுவோ!
வனத்தைக் களவாடிய கை
வளிமேல் விழிவைத்து
வானருகே வீடமைக்க
ஆதியையும் மதியையும்
தூக்கிக் கொண்டு
தூர நகர்கிறதோ வானம்
ஈரமற்ற மானுடத்தே
உறவாடிட விருப்பமற்று!
யாரறிவார்!
புனிதா பார்த்திபன்
படம் பார்த்து கவி: விழிகளுக்கு
previous post