ஸ்ட்ராபெர்ரியை காணும் போதெல்லாம்
உன் தேன் இதழ்கள் தான்
ஞாபகத்திற்கு வருகின்றன
சில நேரங்களில் புளிப்பாக இருந்தாலும்
சலித்து போவதில்லை
சில நேரங்களில் இனிப்பாக இருந்தாலும்
திகட்டி போவதில்லை
உன்னை போல।
மொத்தத்தில்
முத்தமாய் ஏங்கும்
முக்கனியை விட
உயர்ந்தது என்பேன்
ஏனெனில்
மணக்கும் அதன் வாசனையிலும்
உன் நினைவுகளை சுவாசிக்கிறேன்!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)