Where are You என்றாள்
I am in Out side என்றேன்
இப்படி விலகியே இருந்தால்
நம் உறவுக்குள்
Gap தான் விழுமென
கோபத்துடன்
அலைபேசியில் கத்தினாள்.
தண்டவாளங்கள்
விலகி இருந்தாலும்
இரயில் பயணங்கள்
தடை படுவதில்லை
அந்த தேவதைக்கு சொல்லி
புரிய வையுங்கள்
பிரிந்திருக்கும் காதல்
அவ்வளவு சீக்கிரத்தில்
சோர்ந்தும் போகாது
வீழ்ந்தும் போகாதென்று!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)