எழுத்தாளர் இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் நாயகன் விஸ்வம்தான். எவ்வளவோ கனவுகளுடனும்,
கற்பனைகளுடனும் வாழ்வை மிகவும் எளிதாக எண்ணி வாழ்கின்ற நண்பர்கள் கூட்டம். வாழ்வின் போக்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக போட்டுப் பார்க்க, ஆசையாக நடத்திக் கொண்டிருக்கும் இதழை இனியும் தொடர்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் முகத்தில் அறைகிறது. ஆயினும் தன் மன்னி ருக்மணியிடமிருந்து கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் விஸ்வத்துக்கு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை ஊட்டியிருந்ததால் தன் நண்பன், இதழின் எதிர்காலம் பற்றி வருந்துகையில், அவனுக்கும் சமாதானம் சொல்லி தன் மனத்தையும் வேறுவிதமாக திருப்புதல் சாத்தியமாகிறது.
கதையின் போக்கு ஒருவர் எவ்வளவு தான் நினைவாலும் சிந்தனையினாலும் உயர உயரப் பறந்தாலும் முடிவாக தரையிறங்கும் விமானத்தைப் போல நிதரிசன வாழ்வுக்கு தன் நிலையிலிருந்து இறங்கத்தான் வேண்டியுள்ளது என்னும் உண்மையை அழகாக மனத்தில் பதியும்படி முடிக்கும் சிறப்பும் அதற்குச் சான்றாக விஸ்வத்தின் எண்ண மாறுதல்களும் படிப்பவரையும் கொஞ்சம் அசைத்துதான் பார்க்கிறது.
எத்தனையோ புதினங்கள் இதற்குப் பிறகு படித்திருந்தாலும் விஸ்வத்தின் கதாபாத்திரம் நம் மனதுக்கு நெருக்கமாக, வாழ்வியல் தத்துவமே முதல் காரணமாகிறது. அதனால் நம்மை அதனோடு இணைத்துப் பார்த்துக் கொள்ள வைக்கிறது.
புத்தக உலா போட்டி: கமலா பார்த்தசாரதி
previous post