புத்தக உலா போட்டி: கி.சரஸ்வதி

by admin
94 views

எனக்குப் பிடித்த கதாபாத்திரம்
………………………………………………………..

நூல்:  யானை டாக்டர்
ஆசிரியர்: (ஜெயமோகன்)


இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு என் அணுகுமுறை நிறையவே மாறியிருக்கிறது. ‘புழுக்களைக் கவனியுங்கள். ஒரு ஏதுமறியாத குழந்தை போலத் தவழ்கிறது. அதன் வாழ்க்கையை அது வாழ்கிறது. அதைப் பார்த்து ஏன் அருவருப்படைய வேண்டும்’ என்ற ரீதியில் டாக்டரின் (டாக்டர் கே) அறிவுரையைப் படித்தேன். இப்போதெல்லாம், எந்த உயிரினத்தின் மீதும் பேதம் காட்டுவதில்லை. காட்டைப் பற்றிய என் எண்ணமும் நிறைய மாற்றம் பெற்றிருக்கிறது.
வலியைக் கவனிக்கக் கற்றிருக்கிறேன். அதை அவதானித்து நிதானப்படுத்த ஓரளவு அறிந்திருக்கிறேன்.
கற்பதன் சிறப்பான நோக்கம் என்பதே நடத்தையில் ஏற்படும் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் தானே?
காட்டை அணுகும் ஒவ்வொருவரும் இயற்கைப் பேரனுபவம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டால், கடவுள் என்பது இயற்கைதான் என்ற அடிப்படை அறிவேனும் இருந்து விட்டால், எந்த உயிர்ச் சங்கிலியும் அழிந்து விடாமல் எவ்வளவு அழகான வாழ்வு
வரமாய்க் கிடைக்கும்?

யானை டாக்டரில் என்னைக் கவர்ந்த வரிகளுள் சில : இவை டாக்டர் கே சொல்லும் அனுபவப் பாடம். இயற்கையைப் பயின்ற ஒப்பற்ற மாமனிதனின் பொன் வாசகங்கள்.

*உண்மையிலே மனுஷன்தான் இருகக்றதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…
’யானை மட்டுமில்லை, சிறுத்தை காட்டெருமை எல்லாமே அப்டித்தான். அவங்களுக்கு தெரியும்’ என்றார். நான் ‘ஆமா, பசுவுவுக்கு பிரசவம் ஆறதை பாத்திருக்கேன். கண்ணைமட்டும் உருட்டிக்கிட்டு தலைய தாழ்த்தி நின்னுட்டிருக்கும்…’ ‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்

*பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும்

*மனுஷன் என்னமோ அவன் பெரிய புடுங்கின்னு நினைக்கிறான். மிருகங்களுக்கு ஆத்மா கெடையாது பகுத்தறிவு கெடையாது. அவனோட எச்சப்புத்தியிலே ஒரு சொர்க்கத்தையும் கடவுளையும் உண்டுபண்ணி வச்சிருக்கானே அதில மிருகங்களுக்கு எடம் கெடையாதாம். நான்ஸென்ஸ்…

*மனிதனின் கீழ்மைகளை ஒவ்வொருநாளும் முகத்திலறைந்தது போலப் பார்க்கவேண்டும் என்றால் நீங்கள் காட்டில் இருக்கவேண்டும். அனேகமாக இங்கே சுற்றுப்பயணம் வருபவர்கள் படித்தவர்கள், பதவிகளில் இருப்பவர்கள். ஊரில் இருந்தே வறுத்த பொரித்த உணவுகளுடனும் மதுக்குப்பிகளுடனும்தான் வருவார்கள். வரும் வழிதோறும் குடித்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருப்பார்கள். வாந்தி எடுப்பார்கள். மலைச்சரிவுகளின் மௌனவெளியை காரின் ஆரனை அடித்துக்கிழிப்பார்கள். முடிந்தவரை உச்சமாக கார் ஸ்டீரியோவை அலறவிட்டு குதித்து நடனமிடுவார்கள். ஓங்கிய மலைச்சரிவுகளை நோக்கி கெட்டவார்த்தைகளை கூவுவார்கள்.

ஒவ்வொரு காட்டுயிரையும் அவர்கள் அவமதிப்பார்கள். சாலைஓரத்துக் குரங்களுக்கு கொய்யாபழத்தை பிளந்து உள்ளே மிளகாய்ப்பொடியை நிரப்பி கொடுப்பார்கள். மான்களை நோக்கி கற்களை விட்டெறிவார்கள். யானை குறுக்கே வந்தால் காரின் ஆரனை உரக்க அடித்து அதை அச்சுறுத்தி துரத்துவார்கள். என்னால் எத்தனை யோசித்தாலும் புரிந்துகொள்ள முடியாத விஷயம் காலிமதுக்குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது. வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டு மதுக்குப்பியுடன் இருப்பவர்களை இறக்கி பெல்ட்டை கழற்றி வெறியுடன் ரத்தம் சிதற அடித்திருக்கிறேன். ஜட்டியுடன் கடும்குளிரில் அலுவலகம் முன்னால் அமரச்செய்திருக்கிறேன். ஆனாலும் காட்டுச்சாலையின் இருபக்கமும் குப்பிச்சில்லுகள் குவிவதை தடுக்கவே முடிவதில்லை.

You may also like

Leave a Comment

error: Content is protected !!