‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஜெயகாந்தன் எழுதிய நாவலில் வரும் ஹென்றி கதாபாத்திரம் சுவாரஸ்யமானது. அவன் ஆங்கில இந்திய இளைஞன்.
ஹென்றி ஓர் ஊரில் தங்கினாலும் எந்த இடத்துக்கும் சொந்தமானவன் அல்ல. நல்ல உணர்ச்சிகள் மட்டுமே கொண்டவன். முறையான கல்வி கல்லாதவன். மனிதர்களிடம் அன்பும் பிரியமும் கொண்டவன்.
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், எந்த இலக்குகளும் இல்லாமல் தன் மனதின் குரலின்படி வாழும் இலட்சிய இளைஞன் ஒருவனை அப்படியே என் மனக்கண்ணில் காட்டிய கதாபாத்திரம். ஆழ்ந்து சிந்தித்தால் அந்த கதாபாத்திரம் துறவியின் இலக்கணமும் ஹிப்பி இயக்கத்தின் சுதந்திரமும் வெளிப்படுத்துவதுபோல இருக்கும்.
கதைப்படி அவன் பூர்வீகம் கிருஷ்ணராஜபுரம்.
அவன் தன் தந்தையின் ஊரான கிருஷ்ணராஜபுரத்துக்கு வந்து. தந்தையின் பழைய வீட்டை புதுப்பித்துக் கட்டி குடியேறுவது வரையிலான நிகழ்வுகள்தான் கதை.
கதையின் ஆரம்பம் ஹென்றியுடன் துவங்கும்.
பெங்களூரில் இருந்து வரும் ஹென்றி என்னும் ஆங்கில இந்திய இளைஞன் துரைக்கண்ணுவின் லாரியில் வந்து கிருஷ்ணராஜபுரத்தில் இறங்கிக் கொள்கிறான். உடன்வரும் ஆசிரியர் தேவராஜன் ஹென்றியை தன் வீட்டில் தங்க வைத்துக்கொள்கிறான். எதிர்வீடு பூட்டியிருக்கிறது. இடிந்துகொண்டிருக்கும் அந்த வீடுதான் ஹென்றியின் அப்பாவுடையது.
ஹென்றி தன் வீட்டை புதுப்பிக்கிறான். ஹென்றியின் வீட்டு வேலை முடிந்ததும் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க ஆலோசிக்கிறார்கள் தேவராஜனும் துரைக்கண்ணுவும்.
பேபி என்னும் நிர்வாணப் பைத்தியப் பெண் அங்கே வந்து அந்த வீட்டு வேலைகளில் உதவி செய்கிறாள். அவன் அளித்த ஆடையை அவள் அணிகிறாள். ஆனால் அவளை அங்கேயே இருக்கச் செய்ய ஹென்றி நினைக்கிறான். அவள் அவனை விட்டு மறைந்து விடுகிறாள்.
இந்த கதை முழுவதும் ஹென்றியின் பேச்சு, செயல், சிந்தனை, மற்றவர்களோடு பழகும்விதம், இந்த உலகத்தைப்புரிந்துகொள்வது, எதையும் இலகுவாக எடுத்துக்கொள்வது ஒரு நாடோடி லட்சியவாதியாக இப்படி பல பரிமாணங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.
புத்தக உலா போட்டி: தேவராஜன்
previous post