வாழ்வென்பது மகிழ்வின் பிம்பமற்று நகர்தல் துயரமானது. அதனை தாங்கி வலிகளோடு வாழ்தல் பிறப்பின் சாபம். அது போன்ற வாழ்வை எளிய மக்கள் பலர் எதிர்கொள்கின்றனர். அதிலும் ஆண்கள் வலிகளை தாங்கி கொள்கின்றனர். பெண்கள் வலிகளை வாழ்வாக ஏற்றுக் கொள்கின்றனர். கீதாரி நாவலில் கரிச்சா கதாபாத்திரமானது அப்படி தான். வாழ்வில் எவையெல்லாம் மகிழ்வை தருமோ அவை இல்லாமல் போவதை கடந்து வரும் வலியை கரிச்சாவின் நிலை காட்டுகிறது. கரிச்சா எதார்த்தமானவள் .சரிந்து விழும் பாறையில் கனவற்று நகருபவள். உறவுகளின் பிடியற்று தனித்து விடப்படுகையில் விழி திரட்டும் கண்ணீரை துடைக்க கரங்களற்று காலங்கள் ஓடும் கதைக்களம் கரிச்சாவின் பாத்திரம்…. உணர்வில் உழன்று வாசிப்பில் நம்மை உடைய செய்யலாம்.
கீதாரி நாவல் ஆசிரியர் சு. தமிழ்செல்வி ….
புத்தக உலா போட்டி: நிழலி
previous post