நீலம் பதிப்பகம் 2023 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள எழுத்தாளர் தமிழ்ப் பிரபா அவர்களின் கோசலை நாவலின் கதாபாத்திரம் கோசலை.இந்த பாத்திர படைப்பை மிகவும் நுணுக்கமாகவும்,கூர்மையாகவும் படைத்திருக்கிறார் ஆசிரியர்.குள்ள உருவமும்,கூன் முதுகும் கொண்டகோசலை தன் மீது வீசப்படும் துரோகம் ,வெறுப்பு, ஏளனம் அடக்குமுறை எல்லாவற்றையும் தனது விடாமுயற்சி,கடினஉழைப்பு,நேர்மை இவற்றின் மூலம் புறந்தள்ளி இமயம் போல உயர்ந்து நிற்கிறார்.பிறப்பால் உருவாகும் ஊனத்தை தடுக்கும் சக்தி நம் கையில் இல்லை.ஆனால் சக மனிதர்கள் மீது கொள்ளும் அன்பும் பரிவும் உடல் ஊனத்தை கடந்து செல்லும் சக்தி வாய்ந்தவை என்பதை கோசலை பாத்திரம் மூலம் ஆசிரியர் அழுத்தமாக பதிவு செய்து உள்ளார்.தன்னம்பிக்கையை வளர்க்கும் வித்தியாசமான பாத்திரப்படைப்பு.”அன்பின் வழியது உயிர்நிலை அஹ் தில்லார்க்கு என்பு தோல் போர்த்திய உடம்பு ” என்ற வள்ளுவன் வாக்கிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள் கோசலை.
புத்தக உலா போட்டி: பத்மகுமாரி
previous post