எழுத்தாளர் திரு.பாலகுமாரன் அவர்களின் “ஆனந்த வயல்” எனும் நாவலில் வரும் இயற்கை எழில் சூழ் கிராமத்து பிண்ணனி அங்குள்ள மனிதர்களின் அன்புகோபம்,பங்காளி பகைமை என நாவலுக்கும் வேண்டிய அடிப்படைத் தேவையான சுவாரசியம் இருக்கிறது.
குறிப்பாக கதாபாத்திரங்களில் நாயகன் பன்னீர்செல்வம் – நாயகிசெண்பகாவின் நெருக்கமான அந்தரங்க உரையாடல்கள், பங்காளிகளுக்குள் உள்ள மனகசப்பு , அடிக்க வந்த நாயகியின் உறவினர்களுக்கு சுக்குக்காப்பி வைத்துக் கொடுக்கும் நாயகனின் அப்பா, கோவிலுக்கு மாமியாரை அழைத்துச் செல்லும் நாயகன் என நன்றாக அமைந்து இருக்கும்.
ஆனந்த வயலின் கதாபாத்திரங்கள்அனைத்துமே அருமை, அதில் செதுக்கிய சிற்பங்கள் நாயகன் பன்னீர்செல்வம் – நாயகிசெண்பகா. திரு.பாலகுமாரனின் படைப்புகளில் முக்கியமான ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தநாவல்.