எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின்
‘குமரித்துறைவி’ நாவலின்
கதாநாயகன் ‘தென்குளம்
கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன்
செண்பகராமன் தூதுவனாக பயணிக்கிறான்.
அவனது வீரம், சாகஸம், கருணை,
அன்பு, இறைபக்தி, ராஜ விஸ்வாஸம் என கதை நெடுகிலும்
வெளிப்பட்டு என்னை பிரமிக்க
வைத்தது.
மாலிக்காபூரின் படைகள்
திருச்சிராப்பள்ளியை ஜெயித்து,
பாண்டியநாட்டுக்குள் நுழையும்போதே, ஆலய சிவாசார்யார்கள் மீனாஷியம்மையை எடுத்துக்கொண்டும், சுந்தரேசர்
ஆவுடை பெரிதாகையால் அவரை
சிறுகல்லில் ஆவாஹனம் செய்து
கொண்டும் தப்பித்து வந்தார்கள்.
குறத்தியின்மூலமாக அம்மை தான் இருக்க விரும்புமிடத்தை தெரிவித்தாள். அதன்படி அவளை
ஆரல்வாய்மொழியில், சாஸ்தா
குடிகொண்டிருக்கும் பக்கத்து
பாறையில் அவளை இருத்தி,
59 வருடங்களாக ரகசியமாக
அங்கு ஆராதித்தனர்.
அம்மை, ‘என் வீட்டுக்கு நான் போவதெப்போ?’ என்று, குமார
கம்பண்ண பெரிய்ய நாயக்கரின் மனைவி கங்கம்மாதேவி கனவில் வந்து கேட்கவும், அவரனுப்பிய
தூதுவன் ஆரல்வாய்மொழி
அரசரிடம் வந்து கேட்கும்போது,
முதலில் மறுத்தாலும், அம்மையின் விருப்பமென்பதால்,
தானே அவளுக்கு தந்தையாக
இருந்து, சுந்தரேஸ்வரருக்கு மணமுடித்து, சகல சீர்வரிசைகளுடன் தம்பதிகளை
மதுரைக்கு அனுப்பியதான
வரலாற்றுக்கதை அது.
‘மீனாஷி திருமணத்தை
அணுஅணுவாக அனுபவிக்க
வேண்டுமெனில், இந்த புத்தகத்தை படித்தால், மனம்
ஆனந்தகளிப்புறும்.
புத்தக உலா போட்டி: பத்மினி அருணாசலம்
previous post