வணக்கம்
எழுத்தாளர் லட்சுமியின் sriமதி மைதிலி என்னும் கதையில் வரும் மைதிலி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே என்பது போல மைதிலி தன்னை அவமானப்படுத்திய குடும்பத்தாரை தான் நல்ல நிலைமைக்கு வந்தவுடன் கணவனுடன் போராடி தன் நாத்தனார் மைத்துனர் அனைவரையும் ஒன்று சேர்த்து மகிழ்கிறாள்
தாழ்ந்த நிலையில் உள்ள குடும்பத்தினரை ஒன்று சேர்த்து பெருமை கொள்கிறாள்.
மகிழ்வித்து மகிழ் என்பது போல மைதிலி தானும் மகிழ்ந்து பிறறையும் மகிழ்வித்து பெருமை கொள்கிறாள்
லட்சுமி எப்போதும் பெண்களை பெருமைப் படுத்தி எழுதுவார்.
எனவே அவர் கதைகளும் மைதிலி கதாபாத்திரமும் என்னை மிகவும் கவர்ந்வை.
புத்தக உலா போட்டி: பானுரேகா பாஸ்கர்
previous post