நான் படித்த நூலில் எனக்கு படித்த கதாபாத்திரம் ‘எழுத்து சித்தர்’ பாலகுமாரன் அவர்கள் எழுதிய ‘கரையோர முதலைகள்’ நாவலில் வரும் ‘தியாகு’ என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகும். பழி வாங்கத் துடிக்கும் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுக்கு உதவி செய்யும் தாயுமானவன் அவன். மனைவியின் கடந்த கால வாழ்க்கை சிக்கல்களை அறிந்து கொண்டு அவளது உள்ளச் சிதைவுகளை சரி செய்த அன்பான அன்பானவன். கடந்த கால நினைவுகளில் தேங்கி இருக்கும் அவளை நிகழ நிதர்சனத்தை உணர வைத்து தன்னோடு அமைதியாய் வாழ வைத்த பண்பானவன். பொறுமை ஒன்றையே பலமாக கொண்ட கனவனாய் அந்தக் கதாபாத்திரத்தை படைத்திருப்பார் பாலகுமாரன் .கரையோர முதலைகள் கதாநாயகி ஸவப்னாவுக்கு ஈடாக அந்தக் கதாபாத்திரத்தை படைத்து நாவலின் இறுதியில் அவனை ஒரு தாயுமானவனாய் நமது மனதில் நிறுத்தி இருப்பார் பாலகுமாரன்.
புத்தக உலா போட்டி: பொன். குமரேசன்
previous post