வணக்கம்
சுஜாதா எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ புத்தகத்தில்
‘கோதை என்ற ருக்மணி அம்மாள்’ பாட்டி பாத்திரம் என்னை கவர்ந்தது.
கோதை இருபத்தியொரு வயதில் கணவரை இழந்தவள். பிறகு கைம்பெண்ணாக நான்கு பிள்ளைகளுடன் சஜாதாவின் தந்தையிடம் ஒரு சரியான தேர்வாக அடைக்கலம் புகுந்தார்.
தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, அடுத்த தலைமுறைக்கும் அரணாக இருந்து பயனுள்ள வாழ்க்கையை தந்தாள்.
அடைக்கலம் புகுந்த இடத்திலும் வெறும் பாரமாக இல்லை. அவர்களுடைய பிள்ளையை (ரங்கராஜனை) பள்ளி, கல்லூரி வரை நல்ல கட்டுப்பாட்டில் வைத்து வளர்த்தார்.
பருவ வேகத்தில் தவறான பழக்கங்களில் சிக்கி வாழ்க்கை திசை மாறாமல், நல்ல பண்புகளோடு வளர பாட்டி தந்த சூழலே காரணம் என்று எழுத்துலகில் பல புதுமைகளை புகுத்திய சுஜாதாவே நினைவு கூர்கிறார்.
மேலும், ‘சுவீகாரம் என்ற பெயரில், சொந்த பிள்ளையே உரிமை இல்லாமல் செய்யும் சொத்து ஆசை எதற்கு. கணவனே இல்லாமல் நாலு பிள்ளைகளை நான் வளர்க்கல’ என்று சமயத்தில் தடுத்த விவகாரம்,
பின்னாளில் அது பெற்றோருக்கு செய்த பெரிய உபகாரம்.
சில சந்தோஷங்கள் இளம் வயதிலே மறுக்கப்பட்ட குமுறல்கள் குழம்பாக இதயத்தின் அடித்தளத்தில் இருந்தாலும் அதை வெளியில் கக்கும் எரிமலையாக இல்லாமல், குளிர் சுமந்த கொடைக்கானல் மலையாக உறவுகளுக்கும் சமுதாயத்திற்கும் காணப்பட்டாள்.
கோதை பாட்டி போன்ற கைம்பெண்களுக்கு தீர்வு காணாமல் விட்ட இந்த சமுதாயத்தின் மீதான ஆற்றாமை, ஒரு ஆற்றின் எழுச்சியாக அமைதி புரட்சியாக பிரபஞ்சத்தில் முட்டி இருக்கலாம்.
அதன் எதிர்வினையாக சீர்திருத்த சிந்தனைகளும் செயல்களும் சிறுகச் சிறுக நமக்கு கிட்டி இருக்கலாம்.
புத்தக உலா போட்டி: மரு சரவணன்
previous post