போய் இன்னொன்று வாங்கி வரச்சொல்கிறார்.
அவர் கோப படாததால் மனைவிக்கு கோபம்
அப்பாவுக்காக அம்மா அட்ஜஸ்ட் செய்து கொண்டதில் அவருக்கு இருந்த கருத்து மாறுபாட்டை தனது மனைவி விஷயத்தில் அவர் அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்திருக்கலாம்.
தன்னையே மனைவிக்கு விட்டுக் கொடுத்தது சுஜாதா பெயரிலே தெரிகிறது. (அரசு பணியில் இருந்தாலும் வேறு பெயர் கூட வைத்திருக்கலாம் அல்லவா?)
ஆனாலும் அவர் வேறு ஒரு சந்தர்ப்பத்தில், ‘எந்த கணவனும் மனைவிக்கு ஹீரோவாக இருக்க முடியாது’ என்று சொல்லும் போது அவர்களுக்கிடையிலும் நல்ல நாள், கெட்ட நாள் என்ற இயல்புகள் இருப்பது புரிகிறது.
சுஜாதா வாழ்க்கையில் பாட்டி, அம்மா, மனைவி என மூன்று பெண்கள் முக்கியமாக இருப்பது, ஒருவர் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் அல்ல சில பெண்கள் இருப்பார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.
அவர் எழுத்தை மட்டும் அல்ல, ஒரு எழுத்தாளரையே முழுதாய் படித்த நிறைவு எனக்கு இருந்தது.
புத்தக உலா போட்டி: மரு சரவணன்
previous post