வணக்கம்.என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் உடையார் நாவலில் வரும் பஞ்சவன்மாதேவி.இராசராச சோழனுக்கு பதினான்கு மனைவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.அதில் திறமை படைத்த மனைவியாக, அரச தந்திரங்கள் அறிந்தவளாக. வில்லாற்றலில் தேர்ந்தவளாக உலா வருகிறாள் பஞ்சவன்மாதேவி.
இராஜேந்திர சோழனுக்குப் போட்டியாக ஆட்சி செய்ய யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக இறைவன் பெண்மையின் அடையாமாகத் தந்த பரிசாகிய கருப்பையை மலடாக்கிக் கொண்டாள் .
இராஜேந்திர சோழனுக்கு நல்ல சிற்றன்னையாக விளங்கி பல கலைகளைக் கற்றுக்கொடுத்தாள்.
புத்தக உலா போட்டி : முனைவர் நா.சுபலட்சுமி
previous post