எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
இருள் சூழ்ந்த நள்ளிரவில், அந்த மண்டையோடுகள் தொங்கிய கப்பல் அமைதியாக ஒரு சிறிய மீன்பிடி கிராமத்தின் கரையை நெருங்கியது.
வழக்கமாக கேட்கும் அலைகளின் ஓசை கூட அன்று இல்லை.
கப்பலில் இருந்து மெல்லிய வெளிச்சம் மட்டும் கசிந்தது. திடீரென்று, கப்பலின் பக்கவாட்டில் தொங்கிய மண்டையோடுகளில் இருந்து மெல்லிய முனகல் சத்தம் கேட்டது.
பயந்துபோன மீனவர்கள் தங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டனர்.
சிறிது நேரத்தில், அந்த முனகல் ஒரு கோரமான அழுகுரலாக மாறியது.
கப்பலின் நிழல்கள் நீண்டு, கரையில் இருந்த குடிசைகளைத் தொடுவது போல் இருந்தது.
காலையில், அந்தக் கப்பல் மாயமாக மறைந்து போயிருந்தது,
ஆனால் கடற்கரையில் புதிதாக சில மண்டையோடுகள் கிடந்தன.
அவை பார்ப்பதற்கு நேற்று கரை ஒதுங்கிய மீனவர்களுடையது போலவே இருந்தன.
ஒவ்வொரு மண்டையோட்டிலும் ஒருவிதமான பச்சை நிற திரவம் கசிந்து கொண்டிருந்தது.
அந்த கிராமமே திகிலில் உறைந்து போனது.!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.