எழுதியவர்: நா. பத்மாவதி
ஒருநாள் அந்தமான் தீவுக்கு கொள்முதல் செய்ய ஆதி ஐந்து நண்பர்களோடு மரக்கப்பலில் பயணித்தார்.
பயணத்தின் மூன்றாம் நாள் இரவில், கப்பல் இயந்திரக் கோளாறால் நடுக்கடலில் நின்றது. . பழுதுப் பார்க்கும் நேரத்தில், கூட்டமாக வந்தவர்கள் அவர்களை வளைத்துப் பிடித்தனர்.
முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கிகளைக் காட்டி, சிறைப் பிடித்து காவலுக்கு ஆட்களையும் அமர்த்தினர். அதிலுள்ள ஒருவன் மட்டும் தமிழ் அறிந்தவனாக இருந்தான்.
“என் பெயர் அகிலன். நான் தவறான பழக்கத்தால் இங்கு வந்தேன். என்னால் மீள முடியவில்லை. உங்களைக் காப்பாற்ற யோசனை சொல்கிறேன். நீங்கள் தப்பித்து, முடிந்தால் என்னையும் காப்பாற்றுங்கள்”. என்றான்.
அந்தக் கொள்ளையர்கள் உறங்கும் போது, கைக் கட்டுகளைத் தளர்த்தி விட்டான் அகிலன். ஆதி நண்பர்களுடன் கப்பலை கடலில் சத்தமின்றி ஓட்டி தப்பித்தார்கள்.
அடுத்த நாளில், கடலோர காவல்துறையிடம் புகார் கொடுத்து அகிலனை மீட்டனர்.
கடற்கொள்ளையர்களால் சிதலமடைந்த வாழ்வு, அகிலனின் மனமாற்றத்தால் சீரானது என்ற மகிழ்ச்சி ஆதிக்கும் தோழர்களுக்கும் ஏற்பட்டது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.