எழுதியவர்: உஷாராணி
நடுநிசியில் மனதை கிழிக்கும் அமைதியில் கடற்கொள்ளையர்களின் கப்பல் , சோமாலியாவிலிருந்து எத்தியோப்பியாவை நோக்கி,அவர்களின் சிம்பலான மண்டையோடுகளுடன் ஏடன் வளைகுடாவில் மிதப்புடன் வந்தது.
கடல் தான் அமைதியாக இருந்தது. ஆனால் அவர்களின் கப்பலின் உள்ளே ஆரவாரத்துடன் இருந்தது.
கப்பலின் தலைவன் சாஹல் தூரத்தில் பயணியர் கப்பல் ஒன்று அசைவதை காண, இன்று நல்ல வேட்டை என்று அதன் அருகே போனார்கள்.
குதித்து உள்ளே போனால், அனைவரும் கொல்லப்பட்டு இருந்தார்கள்..
சே…. நமக்கு முன்னே A2 குரூப் முந்திக் கொண்டதே…..
ஒவ்வொருவராக பார்க்க சாஹல் கண்ட காட்சி, அய்யோ …… அவன் அன்பு காதலி லியாமா கொல்லப்பட்டு இருந்தாள்.
இந்த உலகத்தில் அவளிடம் மட்டுமே அன்பு கொண்டவன். தன் கையால், வேறொருவரின் காதலி, காதலன், அம்மா, அப்பா ….. இப்படி கொன்றவன் இப்போது தன் காதலி இறந்து கிடப்பதை பார்த்தும், தாங்க முடியாதவனாக தன் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டான்.
கடலிலே காதல் சமாதியானது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.