எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
பவுர்ணமி நிலா வானில் ஜொலிக்க, நீலக்கடல் அழகாய் காட்சி தந்தது.
ஆயிரம் பயணிகள் மேல் கொண்ட அந்தக் கப்பல் தண்ணீரை விலக்கிக் கொண்டு மெதுவாக மிதந்து சென்றது.
இரவு நேரம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் கழிய, திடீரென ஒரு ராட்சச கப்பல் மண்டை ஓடுகளுடன் அருகில் வந்தது.
அதைக் கண்ட கேப்டன் அதிர்ச்சியடைந்தார். இதுவரையில் அவர் அந்தக் கப்பலை அங்கு பார்த்ததே இல்லை.
அது ஆவிகள் உலாவும் கப்பல் என்றும், சிலரின் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்றும் பல கதைகள் உலவின.
இப்போது என்ன செய்வதென்று தெரியாமல், கப்பலை வேறு திசையிலும் திருப்ப முடியாமல், அந்தக் கப்பல் இருக்கும் திசை நோக்கி மெதுவாகச் சென்றார்.
அந்த மர்மமான கப்பல் நெருங்க நெருங்க, பயணிகள் மத்தியில் ஒரு திகில் படர ஆரம்பித்தது.
மறுநாள் காலை தொலைக்காட்சி செய்திகளின் நேற்று இரவு ஆயிரம் பயணிகளோடு சென்ற ‘சமுத்திரா’ கப்பல் நடுக்கடலில் மாயமானது. அதை தேடும் பணியில் கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது என்ற செய்தியோடு அந்தப் பெண் கூறி முடித்தாள்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.