எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
இருண்ட வானம் சூழ்ந்த இரவில், ‘மர்மக்கடல்’ வழியே மிரட்டும் கப்பல் ஒன்று சென்றது. அதன் பாய்மரங்கள் கிழிந்து, பக்கவாட்டிலும், முன்புறத்திலும் மண்டை ஓடுகள் பதிக்கப்பட்டிருந்தன.
கப்பலின் தலைவன், இடும்பன், உடல், மனம் என அனைத்திற்கும் பலம் தரும், அதிர்ஷ்ட கல் என கூறப்படும் ‘டாமலின் ஸ்டோனை’ தேடினான்.
அக்கல்லோ ஒரு பழங்குடி மக்களால் தீவு ஒன்றில் பாதுகாக்கப்படுகிறது. அதைத் திருட, இடும்பனும் அவனது ஆட்களும் தீவை அடைந்தனர்.
அடர்ந்த வனாந்தரம் அவர்களை வரவேற்றது. விசித்திரமான நிழல்களும், பயங்கரமான முனகல்களும் காற்றில் கலந்தன.
காட்டில் சிதறிக்கிடந்த மண்டை ஓடுகளைப் பொருட்படுத்தாமல், டாமலின் கல் மீதுள்ள ஆசையால் கூட்டம் தீவுக்குள் நுழைந்தது.
நடந்து கொண்டே இருந்தவர்கள் வழியை மறந்தனர். காட்டிலிருந்த தும்பலா மூலிகை அவர்களை மதி மயங்கச் செய்தது.
சோர்வுடன் அதே இடங்களை மீண்டும் கடந்து, இடும்பனின் கூட்டம் காட்டின் மர்மத்தில் தொலைந்தது.
ஆனால், மர்ம தீவின் கரையில் அந்த புதையல் வங்கம்தலைவனுக்காய் காத்திருந்தது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.