எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
“ஒரு காலத்தில் கடலின் ராஜாவாக இருந்த இந்தக் கப்பல், இப்போது எலும்புக்கூடாக காட்சியளித்தது.
அதன் ஒவ்வொரு துருப்பிடித்த ஆணிகளும், உடைந்த மரப்பலகைகளும் ஒரு சோகமான கதையைச் சொல்வது போலிருந்தது. ஒருவேளை, பொல்லாத கடற்கொள்ளையர்களின் கூடாரமாக இது இருந்திருக்குமோ?
அல்லது ஆழ்கடலில் மூழ்கிய வீரர்களின் இறுதிச் சின்னமோ?
மற்றொரு முறை, அதே கப்பல் மண்டையோடு ஒரு பொக்கிஷ வேட்டைக்கான வரைபடமாக எனக்குத் தோன்றியது.
அந்தத் தொங்கும் மண்டையிலிருந்து வரும் நிழல்கள், இரகசிய பாதைகளை மறைத்து வைத்திருக்கும் புதையல் தீவுக்கு என்னை அழைத்துச் செல்வது போல் இருந்தது.
நானும் என் நண்பர்களும் சேர்ந்து அந்த வரைபடத்தைப் படித்து, ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்டு, முடிவில் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தோம்.
அந்தக் கப்பல் மண்டையோடு, வெறும் துருப்பிடித்த இரும்பு மட்டுமல்ல, பல சுவாரஸ்யமான கதைகளின் ஊற்று ஆக இருக்கு என்று இருவரும் பேசிக்கொள்ள ஒரு திகிலூட்டும் சத்தம் காதில் விழுந்தது..
“திரும்பி பார்க்க ஒரே இருட்டு நண்பன் அலறும் சத்தம் விண்ணை பிளக்க…
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.