அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
2025 ஆம் ஆண்டின், பிப்ரவரி மாதம் தொடங்கி மார்கழி மாதம் டிசம்பர் வரை, எழுத்தார்வம் கொண்டவர்களுக்காய் அரூபி தளம், வித்தியாசமான அங்கம் ஒன்றை ஆரம்பித்து உள்ளது.
அதுதான், ‘யாவரும் வெற்றியாளரே!’என்ற அங்கமாகும்!
💡ஒவ்வொரு மாதமும் போட்டி அடிப்படையில், விதவிதமான களங்களில் இவ்வங்கத்தில் நிகழ்வுகள் நடத்தப்படும்.
💡இது முழுக்க, முழுக்க எழுத விருப்பம் கொண்ட, எழுத்தில் மேம்பட விரும்பும், எழுத்தை நேசிக்கும், எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள நினைக்கும் எழுத்தாளர்களுக்கான வாய்ப்பாகும்.
💡எழுத்தில் தத்தி, தவழ்ந்து உங்களுக்கான இடமொன்றை நீங்கள் பிடித்திட, அரூபி தளம் இனி ஏணியாய் உங்களோடு பயணிக்க போவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.
💡இதில் வெற்றி தோல்வி என்று எதுவுமில்லை.
💡எழுதி குவிப்பது மட்டுமே உங்கள் வேலை.
ஆகவே, அனைவரும் திரண்டு வாருங்கள்!
💘யாவரும் வெற்றியாளரே! என்ற அங்கத்தின், ஆரம்ப மாதமான காதல் மாதத்திற்கான போட்டியில் பங்கேற்க!💘
💟 பிப்ரவரி மாத போட்டி: காதல்! காதல்! காதல்! காதல் மட்டுமே! 💟
💕போட்டியின் தலைப்பு: காதல் பேசும் பிப்ரவரி!💕
💌 நீங்கள் எழுதி அனுப்ப வேண்டியதெல்லாம், காதல் கதைகள் மட்டுமே.
💌 உங்கள் சொந்த காதல் கதையாகவும் இருக்கலாம், கற்பனை கதையாகவும் இருக்கலாம். ஏன், பக்கத்து வீட்டு காதல் லீலையாகவும் இருக்கலாம், முன்னாள் அனுபவமாகவும் இருக்கலாம்.
💌 ஆகவே, கதையின் போக்கும், வகையும் (genre: family drama, thriller, suspense, romance, comedy, social & so on) உங்கள் விருப்பமே.
💌 வன்மையோ, மென்மையோ வரையறை இல்லை.
💌 காதல் இருக்க வேண்டும் கதையில்! அவ்வளவே!
💌 போட்டிக்கான கால வரையறை: 03. 02. 2025 – 16. 02. 2025
🔏போட்டி விதிமுறைகள்:
🖊️ஒருவர் பல கதைகள் எழுதிடலாம்.
🖊️படைப்புகளை கீழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பிட வேண்டும்.
📌மின்னஞ்சல் குறிப்புகள்:
💎எழுத்தாளர் பெயர்
💎கதையின் தலைப்பு: சுவாரசியம் மற்றும் கவர்ந்திழுக்கும் தலைப்பாக இருந்தால் சந்தோஷம்.
💎அலைபேசி எண்
📌கதையை Ms Word அல்லது ஈமெயிலில் நேரடியாக எழுதி அனுப்பிட வேண்டும்.
📌 போட்டி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் கீழ்கண்ட புலன குழுவில் பகிரப்படும். ஆகவே, போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புவோர் கீழிருக்கும் புலன குழுவில் இணைந்துக் கொள்ளவும்.
🔗 Aroobi Love Month Story Group
📌கதை திருட்டை தவிர்க்கும் பொருட்டு, போட்டிக்கான கதைகளை வேறெங்கும் பதிவேற்ற கூடாது.
📌ஏற்கனவே, வெளியாகிய படைப்புகளை இப்போட்டிக்கு அனுப்புவதை தவிர்க்கவும், அரூபி தளம் உட்பட.
📌கதை கட்டாயம் 100 வார்த்தைகளுக்கு மேற்பட்டு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
📌எழுத்து பிழைகளை தவிர்த்து, வாக்கியத்தின் முடிவில் ஒற்றை புள்ளி வைத்து (single dot), தேவையான இடத்தில் கோமா (coma), மேற்கோள் குறிகள் (quotation) போட்டு, பத்தி (paragraph) முறையில் எழுதி அனுப்பிடவும்.
📌பங்கேற்கும் அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் பங்கேற்பாளர் மின்னியல் நற்சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
📌போட்டிக்கான கதைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்குள் அரூபி தளத்தில் பதிவிடப்படும்.
📌 அவைகளின் திரிகள் அரூபி தளத்தின் அதிகாரபூர்வ குழுக்களில் பகிரப்படும். இணையாதவர்கள் இணைந்துக் கொள்ளவும்.
🔗Aroobi Official What’s Application Channel
🔗Aroobi Official Tamil Website Facebook Page
🔗Aroobi Official Facebook Group
வாசகர்கள் அனைவரும் தொடர்ந்து உங்கள் ஆதரவை அரூபி தளத்திற்கு வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு அரூபி தளம் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
ஆகவே, போட்டிகளில் உற்சாகமாய் கலந்துக் கொண்டு தொடர்ந்து அரூபியோடு பயணிப்பீர்களாக.
பின்குறிப்பு: ‘யாவரும் வெற்றியாளரே!’ என்ற அங்கத்தில் இடம் பெரும் போட்டிகள், அரூபி தளத்தில் நடக்கின்ற, மற்ற மாதாந்திர போட்டிகளில் சேராது.
போட்டியை பற்றிய சந்தேகங்கள் இருப்பின் தனிப்பட்ட முறையில் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி அனுப்பி தெளிவுப்படுத்தி கொள்ளவும்.
உங்களைப் போலவே எழுத முயற்சிக்கும் மற்றும் முனைப்பு காண்பிக்கும் யாராகினும், அவர்களை அரூபிக்கு அறிமுகப்படுத்தி போட்டியில் பங்கெடுத்திட வழி வகுத்திடுங்கள்!
இலக்கியம் படைத்திடுங்கள்! தமிழை வளர்த்திடுங்கள்!
நன்றி. வணக்கம்.