எழுதியவர்: இ.தி.ஹேமமாலினி
நிழல்கள் ஆடும் ஏடுகள் தன்னில்,
ரகசியங்கள் உறங்கும் மாயப் புத்தகம்!
திறந்தால் போதும், திசைகள் மாறும்,
காலம் கூட கைகூப்பி நிற்கும்!
வார்த்தை ஒவ்வொன்றும் வாசல் திறக்கும்,
விந்தை உலகங்கள் விரியக் காட்டும்!
வானவில்லின் வண்ணங்கள் அதில்,
மந்திரக் கதைகள் மலரும் நிதம்!
தேவதை வந்து பேசும் மெல்ல,
தீய சக்திகள் திகிலில் சொல்லும்!
படித்தால் போதும், பறக்கலாம் நாம்,
மாயப் புத்தகத்தின் மாயம் இதுதான்!
தொட்டவுடன் மலரும் புதுப்புது அத்தியாயம்,
ஒவ்வொரு பக்கமும் ஒரு புதிர் போலும்!
கற்பனையின் சிறகுகள் விரிக்கும் நேரம்,
மாயப் புத்தகம் ஒரு கனவு தேசம்!
முடிவில்லாத பக்கங்களைக் கொண்டது அது,
முழுதும் படித்தாலும் புதிதாய் தோன்றும்!
மனதின் ஆழத்தில் ஒளியும் அது,
மாயப் புத்தகம் ஒரு ஞானக் களஞ்சியம்!
சந்திரனின் ஒளியில் ஜொலிக்கும் அதன் கட்டுகள்,
சூரியனின் கதிரில் மினுங்கும் எழுத்துகள்!
பேசும் படங்கள் உள்ளே ஒளிந்திருக்கும்,
மாயப் புத்தகம் ஒரு விந்தைப் பெட்டகம்!
எடுத்துப் படிக்கும் ஒவ்வொரு நொடியும்,
புதுப்புது உணர்வுகள் நெஞ்சில் ஊறும்!
சாதாரணமான புத்தகம் இதுவல்ல,
இது ஒரு மாயாஜாலப் புதையல்!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.