எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா
மெய் எழுத்து வார்த்தை: கத்திக்கப்பல்/க்
தமிழரசியின் கண்களில் காணும் காகிதமெல்லாம் கத்தி கப்பலாகவே தெரிந்தன என்ன தமிழ்
மனசு இங்க இல்ல போலயிருக்கு என்னாச்சு எனக்கேட்ட உடன் பணி செய்யும் ஜெயகுமாரியிடம் மகன் ஒரு வாரமாக கத்திக்கப்பல் செய்து கேட்கிறான் தனக்கு செய்ய தெரியவில்லை என்றாள்
ஒரு காகிதத்தை எடுத்து கத்திக்கப்பல் செய்யும் முறையை செய்துகாட்டி சொல்லிக் கொடுத்தாள் ஜெயக்குமாரி
வீடு திரும்பியதும் தான் செய்ததும் ஜெயக்குமாரி செய்ததுமாக இரண்டு கத்தி கப்பல்கள் மகனிடம் கொண்டு கொடுத்தாள் தமிழ்
அப்படியே இறுகக்கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டவன் எடுத்துச்சென்று தொட்டிநீரில் விட்டான் மூழ்கியதும் தமிழிடம் ஓடி வந்தான் ஃபர்ஸ்ட் சாப்பிடனும் என சாப்பிட வைத்தாள்
வண்ணவண்ண காகிதங்களில் வகைவகையாய் கப்பல்கள் செய்துகொடுத்தாள்
கடலென குட்டிக்குட்டி கப்பல்கள் நடுவே கத்திக்கப்பல் கிடைத்த மகிழ்ச்சி வெள்ளத்தில் தமிழரசியும் அவள் மகனும்
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.