மெய் எழுத்து போட்டி கதை: சத்தம் இல்லாத மௌனம்

by admin 2
61 views

எழுதியவர்: அருள்மொழி மணவாளன் 

மெய் எழுத்து வார்த்தை: மௌனம்/ம்

“ஏய்”

.. 

“என்னை பார்ருடி”

.. 

ஏ, சாரிடி”

.. 

“ஏதாவது பேசுடி?”

.. 

“இப்படி மௌனமா இருந்து என்னை கொல்லாதடி”

.. 

“சரி, இப்ப என்ன? நீ உங்க அம்மா வீட்டுக்கு போகனும் அதானே?” 

மௌனமாக அவனை திரும்பி பார்த்தாள். 

“அப்பாடி.. என் பொண்டாட்டி என்னை பார்த்துட்டா” என்று மகிழ்சியில் குதித்தான். 

அவனை முறைத்து முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“சரி, சரி கோவித்து கொள்ளாதே?” 

..

“என்னை பார்”

“ம்ம்”

“ரொம்ப நாள் அம்மா வீட்ல இருந்துடாதே! சரியா?”

“ம்ம்”

“ரெண்டு நாள்ல திரும்பி வந்திடனும்!”

“ம்ம்” 

“கண்டிப்பா போகணுமா?” என்றான் கிறக்கமாக 

“ம்ம்” என்றாள் அவனை முறைத்துக் கொண்டே 

“நீ இல்லாமல் தனியா என்னால இங்க இருக்க முடியாதுடி!” என்றான் சோகமாக

அவளால் மட்டும் அவனைப் பிரிந்து இருக்க முடியுமா? அதே சோகத்துடன் “ம்ம்” என்றாள்.

“சரிஇஇ, இரண்டு நாள் மாமாவ பட்டினி போட்டுட்டு போற. இன்னைக்கு ஃபுல் மீல்ஸ் கிடைக்குமா?” என்று ஏக்கமாக அவளைப் பார்த்தான். 

வெட்கத்துடன் “ம்ம்” என்றாள். 

அவனும் அவளை அணைக்க, கணவனது ஆசைக்கு இணங்கினாள் மௌனமாக. 

அதன்பின் அங்கு வார்த்தைகள் இல்லை. வெறும் சப்தங்கள் மட்டுமே.

ஓசை இல்லாத, சத்தம் இல்லாத, மௌனம் என்ற நிலையை சொல்வதற்கு எழுத்துக்கள் கோர்த்த வார்த்தைகள் தேவைப்படுகிறது

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!