எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
தேர்வு செய்த படம்: படம் 9
நான் ஒரு டென்னிஸ் சாம்பியன். சர்வதேச போட்டிகளில் பல முறை சாம்பியன் பட்டம் பெற்றவன்.
நான் ஆடும் எல்லா ஆட்டங்களுக்கும் அவள் வந்து விடுவாள். என்னை போட்டோ எடுத்து தள்ளி விடுவார்.
போன வருடம் ஒரு போட்டியின் போது அந்த பெண் உணவகம் வந்தார் எனக்கு ஹை சொல்லி விட்டு எனக்கு முன்னால் உட்கார்ந்து என்னோடு சகஜமாக பேச ஆரம்பித்தார்.
எந்த விதமான ஒளிவு மறைவு இன்றி மனதில் பட்டதை அப்படியே பேசினார். நான் ரஷ்யா குடிமகன். அவள் இங்கிலாந்து. அவள் நேரடியாக கேட்டார்.
“ உங்களுக்கு என்னை பிடித்து இருக்கிறதா… ? “
நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். அவர் அடுத்து ஒன்று கேட்டார்.
“ நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா… ? “
எனக்கு அவளை பிடித்து இருந்தது. நல்ல அழகி. அதை விட அவர் பேசுவது மிகவும் எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் நான் எதுவும் சொல்ல வில்லை. அவள் பதில் சொல்ல சொன்னார். நான் இந்த வருடம் விம்பிள்டன் போட்டி முடிந்ததும் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்றேன்.
அவளுக்கு குஷி. சந்தோஷம். விம்பிள்டன் இறுதி போட்டி.
மிகவும் சிரமமான போட்டி. அமெரிக்க வீரர் சரியான சவாலாக இருந்தார். நான் ஆடும் போது அவர் என்னை உற்சாகமாக விளையாட வைத்தார். அவரின் ஆதரவு என்னை சிறப்பாக ஆட வைத்தது. மிகவும் போட்டி இருந்தாலும் கடைசியில் நான் வெற்றி பெற்று விட்டேன். அவள் மைதானத்தில் என்னை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தார். நான் சந்தோஷத்தில் இருந்தேன். இரட்டிப்பு சந்தோஷம். ஒன்று போட்டியில்
சாம்பியன் ஆனது. மற்றது என் காதலியின் முத்தம். இரண்டும் என்னை தள்ளாட வைத்து விட்டது.
இனி என்ன… ?
உலக சாம்பியன் ஆகி விட்டேன். என் காதலை சொன்னேன். அவள் என்னை கட்டி பிடித்து முத்த மழை பொழிந்தார். அடுத்த மாதம். லண்டன். பெரிய சர்ச்.
எங்கள் இருவருக்கும் கல்யாணம் நடந்து முடிந்தது. புது மனைவி. புது இடம். புது வாழ்வு.
அவள் அவள் வீட்டில் அவள் அறைக்கு அழைத்துச் சென்றார். அறை முழுக்க முழுக்க என் போட்டோக்கள்.
சிறந்த ரசிகை என்று நான் உணர்ந்தேன். எங்கள் வாழ்வு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் சிறந்த போட்டோகிராஃபர் பட்டம் வாங்கினார். எனக்கு மகிழ்ச்சி.
எங்களுக்கு இரண்டு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பேர் இருவரும் சேர்ந்து வைத்தோம்.
ஆம்.
விம்பிள்டன்..!
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.