கவிஞர்: ஆர். ஜே. கௌதமி கார்த்திகேயன்
பளபளக்கும் பல வண்ணம் உன்னில்!!
நான் உன்னை பார்க்கும்
காட்சி எல்லாம் என் கண்ணில்
படபடக்கும் பட்டாம்பூச்சியோ நீ!!!
பூக்களை ரசிக்கும் என் மனம்,
பூவை மறந்து
பூவில் உட்காரும்
உன்னை ரசிக்கும் இனி,
தினம் தினம்!!!!
நீ கூட சிறு பறவை தான்!
ஏனென்றால்
கூட்டுக்குள் இருந்து தானே
வெளியில் வருகிறாய்!!!
பறவைகள்
தன்னை காத்துக் கொள்ள
கூட்டுக்குள் இருக்கும்.
ஆனால் நீயோ!!!
உன்னை
இந்த உலகிற்கு வருவதற்காக
தயார் செய்து கொண்டு,
வந்து பறக்கிறாய்!!!!
உன்னை
காணும் போதெல்லாம்
உன் பொறுமை
எனக்கும் வேண்டும்
என நினைப்பேன்.
கூட்டுக்குள் நிதானம்
காத்து, பல வண்ணம்
தீட்டிக்கொண்டு,
கூட்டை விட்டு
வெளியில் வந்து
படபடவென பறந்து
திரியும் பட்டாம்பூச்சியே!!!!