ஒற்றுமையாய் வாழ்ந்தால் அழிவில்லை என்றே
உணர்த்திடவே உலகினிலே படைக்கப்பட்டாய் நன்றே!
மூலக்கூறு பலசேர்ந்து உருவானாய் பிசைவாய்
அழுத்தம்பல கொடுத்தாலும் இருப்பீர்களே இசைவாய்!
ஒன்றுசேர்ந்த உங்களுக்கு அழிவில்லை என்றும்
அதனாலே ஆபத்தாய் அறிந்தோமே இன்றும்!
பூமிக்குள் பலஅடிகள் பாழாகிப் போச்சு
என்றாலும் உங்களுடன் பழக்கம் என்றாச்சு!!
பூமலர்