பசியில்லை என்றாலும்
பந்திக்கு முந்துவது….
போக்குவரத்து மதியாது போதையில் வண்டியோட்டுவது….
தன்னலமே சிறப்பென
தவறாக நினைப்பது…
உதவி செய்தவரையே
ஒதுக்கிட துடிப்பது..
உள்ளத்தில் நஞ்சோடு
உதட்டில் உறவாடுவது…
உயிருக்கு போராடுவோரை
ஓடி… படமெடுப்பது
பகட்டு வாழ்வுக்காக
பண்பாட்டை குலைப்பது
இதுவெல்லாம் நிகழ்வதற்கு
இறுமாப்பே சுயநலம்
“சோழா” புகழேந்தி
