படைப்பாளர்: ஆர் சத்திய நாராயணன்
அந்த நாளை மறக்க முடியாது. என் வீட்டு முன்னே உள்ள ஒரு சாலையில் பறக்கும் தட்டு ஒன்று வந்தது. சிவப்பு நிறம். நெட்டையாக ஒரு உருவம். கையில் ஒரு சதுர பெட்டி. மோபில் விட பெரிசு. கம்ப்யூட்டரை விட சின்னது.
யார் நீ என நான் கேட்டேன். அவன்/ அவள் சதுர பெட்டியை எடுத்து சில பொத்தான்களை அழுத்தியது அந்த உருவம். தமிழில் கேட்டது.
நான் சனி கிரகத்தில் இருந்து வருகிறேன். என் பெயர் ஆர். 003 512. எனக்கு பசிக்கிறது… சாப்பிட வேண்டும். எனச் சொல்லி… தொடர்ந்து செய்தி சொன்னது நான் பல வருடங்களாக பயணித்து வந்து உள்ளேன். எனக்கு பழ ஜுஸ் வேண்டும்.
இந்த பறக்கும் தட்டு என்பது கால எந்திரம். இதன் வேகம் கிட்டத்தட்ட ஒளியின் வேகம். ஜுஸ் வேண்டும்.
நான் போய் ஆப்பில் ஜுஸ் கொண்டு வந்தேன். அவன்/அவள் வயிற்றில் ஸ்டராவை வைத்து குடித்துவிட்டு… ரொம்ப நன்றி என்றது. எனக்கு ஒரு சதுர பெட்டியை கொடுத்தது…
நீ நிதானமா அதை ஆராய்ச்சி செய். உனக்கு எல்லாம் புரிய வரும். உங்களுக்கு ரொம்ப நன்றி. நான் என் கிரகத்திற்கு உடன செல்ல வேண்டும். நீ பிறகு என்னை தொடர்பு கொள்ளவும்.
வருகிறேன் என்று சொல்லி விட்டு பறக்கும் தட்டில் ஏறி பறந்தது அந்த பறக்கும் தட்டு..!
ஆம்…!! நான் மட்டுமே பார்த்தேன்…!!!
முற்றும்.