படைப்பாளர்: கமலா பார்த்தசாரதி
ஆஹா ஏலியனுடன் ஒரு நாள் பயணம் அற்புதமாக ஆரம்பித்தது. இருவரும் பள்ளிப்பிள்ளைகள் போல கைகள் சேர்த்துக் கொண்டு யார் கண்ணிலும் படாமல் ஓர் வான ஊர்வலம் போவோம்.
நேராக சொர்கம் சென்று என் அப்பா,அம்மாவைப் பார்த்து ஒரு முத்தம் கொடுத்த பின் அங்கிருந்து கிளம்பி ஆங்கிலத்தையும் தமிழையையும் செம்மையாகக் கற்பித்த சாமிநாதன் சாரையும்,வேதவல்லி மேடத்தையும், அருணாசலம் பண்டிட்டையும் கண்டு வணங்கி விடைபெற்று நேராக கம்பன், திருவள்ளுவன்,பாரதியார்,கண்ணதாசன் போன்ற பெருங்கவிகளை சந்தித்து சற்று நேரம் உரையாடி பூரி ஜெகன்னாதர் ஆலயம்,அயோத்தியா ஆலயம் மற்றும் பிருந்தாவனம் சென்று வணங்கி பின் பாஸ்டன் சென்று மகன் குடும்பத்துடன் சற்று நேரம் செலவழித்து பேத்தியை இடுப்பில் வைத்து உணவு ஊட்டி சிறுவயதில் அன்பைப் பொழிந்த விஜயா மாமி, இராஜாமணி மாமாவின் முகவரியைத் தொலைத்த வருத்தம் தீர ஏலியனின் உதவியுடன் அவர்கள் இருப்பிடம் சென்று அவர்களோடு மகிழ்ச்சியாக நேரம் செலவழித்து இந்த அபூர்வமான அனுபவங்களைப் பரிசளித்த ஏலியனுக்கு ஒரு நன்றி சொல்லி விடைபெற அடடா அதற்குள் ஒரு நாள் முடிந்து விட்டதே.
முற்றும்.