ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஏலியனுடன் செல்ஃபி 

by admin 1
49 views

“ராதே..!.ராதே…! இன்னைக்கு நியூஸ் பேப்பர் படிச்சயா?” சேது தாத்தா 

துள்ளிக் குதித்து கொண்டு பாட்டியிடம் ஓடி வந்தார்.

“ஓல்ட் மேன்..! வாட் ஹேப்பன்ட்?”

“நேற்று ராத்திரி பறக்கும் தட்டில் ஏலியன் வந்து இறங்கி இருக்கிறாராம். அவரைப் பார்த்தேன் என்று ஒருத்தர் பேட்டி கொடுத்திருக்கிறார்.”

” நான் ஏலியனைப் பார்த்து அவரோட  போட்டோ எடுத்து போட்டா  ஃபேமஸ் ஆயிடுவேன்.”

“ஆமாம் ராதே..!”

“கோ மேன்.. உன்னோட எப்பவும் சுத்தற பிரண்ட்ஸோட போய் ஏலியனை தேடுங்க.‌ இங்கு கூட்டி வாங்க.”

பேசிக் கொண்டு இருக்கும் போது மாடியில் இருந்து ஒரு வித்தியாசமான உருவம் இறங்கி வந்தது.

“ஹே..ராதே… எனக்கு பயமாயிருக்கு.”

“ஹை..! ஏலியன்.‌ உட்காருங்க. என்ன சாப்பிடறீங்க?”

ஏலியன் வித்தியாசமான சத்தத்தை எழுப்பியதும் தாத்தா பயந்து ரூமுக்குள் ஒளிந்து கொண்டார்.

கண்ணாடி டம்ளரில் ஜூஸை ஊற்றி ஸ்டிரா போட்டு ராதா பாட்டி கொடுத்ததும் சந்தோஷமாக குடித்த ஏலியன்  மகிழ்ச்சியாக குதித்தார்.

“ஓல்ட் மேன்..! கம் ஹியர்.‌ எங்களைப் போட்டா எடு மேன் ‘

“நான் வரமாட்டேன்.” 

 பாட்டி  ஏலியனோடு செல்பி எடுப்பதை வித்தியாசமாக‌ ஏலியன் பார்த்தார்.

காலிங் பெல் அடித்துக் கொண்டே இருந்தது.‌ ஏலியனோட ஒரு மணி நேரம் நிம்மதியா இருக்க விட மாட்டாங்க..!  என்று சலித்துக் கொண்டே எழுந்த ராதா பாட்டி தன்னைச் சுற்றி ஏலியனைத் தேடினார்.

“ராதே…! நல்ல தூக்கமா?”

“கனவா..! “

அரூபி தளத்தில் இந்த கனவைப் பற்றி எழுத ஆரம்பித்தார் ராதா பாட்டி.

முற்றும்.

ஏலியனுடன் ஒரு நாள் கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள வேண்டுமா?!

https://aroobi.com/13504-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை:

You may also like

Leave a Comment

error: Content is protected !!