படைப்பாளர்: இந்துமதி
என் மனதில் எப்பவும் விதவிதமான கற்பனைகள் ஓடிக் கொண்டே இருக்கும் .
சந்திரயான் விட்டப்போ. சந்திரனுக்கு போவது மாதிரி கனவெல்லாம் தோணுச்சு.
அங்கே போய் ஒரு ஆறு மாதங்கள் தங்கி இருக்கலாமா என கூட யோசித்தேன்.
அதுக்கு இப்போ வாய்ப்பில்லை ன்னு சொல்லிட்டாங்க ப்பு.
இது உல்டா வா இருக்கே. இருக்கட்டும் அதையும் தான் பார்ப்போம். இப்போ வேற்று கிரத்தில். இருந்து ஒரு உயிரி இங்கே வந்தா நான் என்ன செய்வேன்? அது என்ன மொழி பேசும். அதன் உடல் நம் உடல் மாதிரி தானா? அல்லது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தில் வரும் ஏலியன் மாதிரி முட்டைக் கண்ணோடு இருக்குமா?
அதுக்கு ஸ்பெஷல் சக்தி சட்டுனு மேலெழும்பி அப்படியே ஜிவ்வென்று பறக்கிற மாதிரி ஏதும் இருந்தால் எவ்வளவு ஜாலியா இருக்கும்.
அதோடு சேர்ந்து நாமும் அந்தப் சக்தியை பயன்படுத்தி இங்கே எல்லோரையும் நல்லா விரட்டலாம். ஆஹா, நினைச்சாலே மனசெல்லாம் பரபரவென இறக்கை கட்டிப் பறக்குதே. அதுக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்டுக் கேட்டு அதையெல்லாம் வாங்கித் தந்து நல்லா ஐஸ் பிடிச்சு வைச்சுக்குவேன். அப்போ தான் நான் சொல்வதை அது
கேட்கும். ஒரு வேளை அது என்னை விட புத்திசாலி எனில் அது சொல்வதை நான் கேட்டுட்டு போறேன்.
ஏலியனுடன் ஒரு நாள் நல்லா உலகத்தையே சுற்றி விட்டு முடிஞ்சா அதோட கிரகத்துக்கும் போய் அங்கே இருக்கிற அதன் உறவையெல்லாம் பார்த்து பேசி விட்டு அவங்களையும் இங்கே வரச்சொல்லி ஒரு அழைப்பு கொடுத்து விட்டு இங்கு வந்து பெரிதாக பீற்றிக் கொள்வேன்.
எது எப்படியோ ஏலியன் இங்கு வந்து என்னோட ஒரு நாள் தங்கியதை அதோடு நான் என்னவெல்லாம் பார்த்தேன், செய்தேன் என்பதை எல்லாம் வீடியோ, போட்டோ, செல்ஃபி என எடுத்து எல்லா சோஷியல் மீடியாவிலும் போட்டு அந்த ஒரே நாளில் நான்உலக அளவில் பெரிய ஆளாகிடுவேன்.
முற்றும்.