படைப்பாளர்: குரங்கி
ஏம்மா என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கு…என்னால சந்தோஷமா வாழ முடியாத? என்று ஏங்கிய கண்களோடும் கண்ணீரோடும் அஜய் அவன் அம்மா நிலாவை பார்த்து கேட்டான். நிலா தன் மகன் கேள்வியை புரியாமல் அவனை பார்க்க, அவனே தொடர்ந்தான் பக்கத்து வீட்டு பாலாவுக்கு அவங்க அப்பா சைக்கிள் வாங்கி கொடுத்து அத ஒட்டவும் சொல்லிக் கொடுகிறார்.
அவன் எவ்ளோ சந்தோஷமா இருக்கான் தெரியுமா? நான் பிறந்ததிலிருந்து எனக்கு அப்பாங்கிற அன்பே இல்லாம போய்ட்டு என்று கண்ணீரோடு அவன் கூற, நிலாவுக்குமே தன் ஆசையையும் ஏக்கங்களையும் எண்ணி கண்ணீர் ஆற்பெடுத்தது. அஜய்க்கு வயதோ பத்து. நிலா தன் கணவனை இழந்து 9 வருடங்கள் கடந்திருந்தன.
தன் மணவாழ்க்கை பொய்த்துப்போய், தன் மகனுடைய ஆசைகளும் நிராசையாக மாறிய நாட்களை நினைசிக்கிட்டே இருவரும் உறங்கி போயினர். திடீரென முழிப்பு தட்டிய நிலா படுக்கை அறையின் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க ஏதோ ஒரு உருவம் கண்களுக்கு தெரிந்தது. யாரது என்று தெரிந்துக்கொள்ள கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள். முன்பின் கண்டிராத வித்தியாசமான உருவம்.
ஒரு நொடி பயந்தவள், வீட்டினுள்ளே ஓட பார்க்க அந்த உருவம் அவளை நிறுத்தி தன்னை அறிமுகப்படுத்தியது. எனது பெயர் யோகியன்ஸ். நான் வேற்று கிரக வாசி. எனது ஸ்பேஸ் ஷிப் வேலை செய்யாமல் போய் விட்டது. அது சரியாகும் வரை நான் இங்க தங்கி கொள்ளவா என்று கேட்டுக்கொண்டிருக்க அஜய் நடந்தது அத்தனையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கு யோகியன்சை ரொம்ப பிடித்து விட்டது. அம்மா நம்மோடு இந்த யோகியன் இருக்கட்டும் என்று அவன் கெஞ்ச சரி என்று நிலா ஒத்துக்கொண்டாள். யோகியான்ஸ் அஜயுடன் நெருங்கி பழகினான். அஜயின் மொத்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் அத்தனையும் யோகி நிறைவேற்றினான். அஜயின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அதைப்பார்த்த நிலாவின் முகத்திலோ அவள் மறந்து போயிருந்த சிரிப்பு எட்டிப்பார்த்தது. யோகியின் மீது நிலாவுக்கு காதல் மலருமா?
முற்றும்.