படைப்பாளர்: பாக்கியலட்சுமி சத்தியநாராயணன்
நளினா காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்பவும்
சமயலறைக்குள் வரும்போது ஏதோ சத்தம். அந்த சத்தம் வந்த திசையை
நோக்கிப் பார்த்தாள். ஒரு சிறு உருவம் மனிதர்களைப் போலவே ஆனால்
மனிதன் அல்ல ஓ நீதான் ஏலியனா ? என்றாள்.
அது திருதிருவென விழித்தது. ஏதாவது சாப்பிடுகிறாயா ? என்று
கேட்டாள்.ஒரு தட்டில் ரொட்டியை வைத்துக் கொடுத்தாள். அது மெதுவாக தொட்டுப்பார்த்தது. பின் சாப்பிடத் தொடங்கியது. சாப்பிட்டவுடன் அதற்கு பயம்விலகியது.
நளினாவை அதற்கு மிகவும் பிடித்துப் போயிற்று. மதியம் திரும்பவும்
அதற்கு தட்டில் உணவு கொடுத்தாள் நளினா. இப்போது ஏலியன்
நளினாவை சாப்பிட அழைத்தது. நளினாவிற்கு கண்களில் தானாக
கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.கணவரும் பிள்ளைகளும் சாப்பிட்டாயா ? என்று கேட்பார்கள் ஆனால் யாரும் உடன் சாப்பிட கூப்பிட்டதே இல்லை. என்னுடன் நீ இருந்து விடு என்று ஏலியனைப் பார்த்துக் கேட்டாள் அதற்குள் ஏலியனை அழைக்க அதன் கூட்டம் வந்துவிட்டது.
இதைப் பார்த்த நளினாவின் கணவன் என்னை மன்னித்து விடு நளினா !
வேலை வேலை என்று உன்னை கவனிக்க மறந்து விட்டேன். இனிமேல்
நாளுக்கு ஒரு முறையாவது இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்றான்.
நளினா ஏலியன் வாழ்க என்று மனதார நினைத்தாள்.
முற்றும்.