படைப்பாளர்: கவிஞர், கவிச்சுடர் பா. குரு
அந்தி சாயும் பொழுது ஆகாயத்தில் ஏதோ புரியாத ஒரு அழகு
புஸ்வானம் போல் ஒரு வர்ணஜாலம். எங்கள் வீட்டில் இருந்து நான்கு
வீடு தள்ளி ஏதோ பாத்திரம் உடையது போன்று ஒரு சத்தம் கேட்டது.
அதே சமயத்தில், ஏதோ சண்டை நடப்பது போல் ஒரு சத்தமும்
கேட்டது. அந்த சத்தம் கேட்ட வீட்டில் ஒரே புகை மண்டலமாக காட்சி
அளித்தது. எங்கள் வீட்டில் யாரும் இல்லை, எனவே ஓடி சென்று
பார்த்தோம். அந்த இடத்தில், தேசை கல் மேல் இட்லி பானையை மூடி
வைத்து போல் இருந்த ஒரு பொருள் மீது புகை மூட்டமாக இருந்தது.
அதன் அருகில் செல்ல அனைவரும் பயந்தனர். ஆனால் ஆர்வ
மிகுதியால், நான் அருகில் சென்று பார்த்தேன். ஒரு உருவம்
தென்பட்டது. என்னை பார்த்த உடன், அந்த உருவம் பயந்து போய்
அதன் உள்ளேயே பதுங்கியது. அது மனிதன் இல்லை, ஆனால்
உறுப்புகள் இருந்தது. அதன் இடம் பேச முயற்சி செய்தேன்.
என் அருகில் வந்து ஏதோ புரியாத மொழியில் பேசியது. நான் தமிழ்
பேசினேன். கண்ணை மூடி திறந்தது. தமிழ் அவனுடைய மொழி
இல்லை, எனக்கே புரியவில்லை. அவன் பெயர் எல்ட்ரா. அவன் ஒரு
வேற்றுகிரகவாசி. ஆராய்ச்சிக்காக வந்த அவன் விமானம் விழுந்து
விட்டது. அவன் என்னிடம் உதவி கோரினான். யாரும் முன்
வரவில்லை, ஆனால் எனக்கு எல்ட்ரா உதவி செய்ய மனம் வந்தது.
எல்ட்ராவை வீட்டிற்கு அழைத்து சென்றேன். ஆனால், அம்மா ஒத்து
கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்து, மனித உருவத்துக்கு மாற
சொன்னேன். உடனே மாறிவிட்டான். அம்மாவிடம் எப்படியோ பொய்
சொல்லி அவனை வீட்டுக்குள் அழைத்து சென்றேன். இருவரும்
இணைந்து இரவு முழுவதும் விளையாடி கொண்டே இருந்தோம்.
அவனுடைய கிரகத்தில் உள்ள விளையாட்டுகளை எனக்கு சொல்லி
தந்தான். நம்முடைய கிரக விளையாட்டுகளை நானும் சொல்லி
தந்தேன். காலை பல் துலக்க செல்லலாம் என்ற உடன், “அப்படி
என்றால் என்ன?” என்று கேட்டான். சிறிது நேரம் சிரித்த முகத்தோடு
எல்லாவற்றையும் சொல்லி தந்தேன். பிறகு அம்மா சாப்பிட
அழைத்தார், சாப்பாடு போட்டவுடன் “இது என்ன?” என்று கேட்டான்.
“காய்கறிகள்” என்று அம்மா சொன்னார்கள். “எனக்கு இது எல்லாம்
பிடிக்காது” என்றான். உடனே அம்மாவுக்கு கோபம் வந்தது. ரப்பர்
போன்ற அவன் காதுகளை கிள்ளினார் அம்மா. பிறகு சாப்பிட செய்தார்.
மெய்மறந்து போன அவன் அளவு அதிகமாக சாப்பிட்டான். “அம்மா,
இது என்ன அருமையாக சாப்பிட்டான்” என்றார். வின்களத்தை சரி
செய்ய அழைத்து சென்றான். அப்போது எல்ட்ரா, “இது போன்ற
உணவை எங்கேயும் இதுவரை சாப்பிடவில்லை” என்று மன
மகிழ்ச்சியோடு என்னிடம் சொன்னான்.
வின்களத்தை சரி செய்த பின் வந்து படிக்க அமர்ந்தோம். எனக்கு நன்றாக சொல்லி கொடுத்தான். எனக்கு அவன் மீது பாசம் தோன்றியது. நண்பன் இல்லாத என் வாழ்க்கையில் வரமாக கிடைத்தான். பால்பாயமும் பால்கோவவும் சமைத்து கொடுத்தார். அவனுக்கு அதனை சாப்பிட எல்ட்ரா ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் வானுக்கும் பூமிக்கும் துள்ளி குதித்தான். பின் அவனை பிரிய வேண்டிய நேரம் வந்தது. அம்மா செய்த இனிப்பை அவனுக்கு கொடுத்தார். அப்போது தான் அவர் எங்களிடம் சொன்னான், “எல்ட்ரா, நீ வேற்றுகிரகவாசி என்று தெரியும். நேற்றே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சொல்லி விட்டார்கள். அதனால் தான் உங்கள் கிரகவாசிகளுக்கு செய்தேன். அனைவருக்கும் இதை கொண்டு போய் கொடு” என்று சொல்லி கொடுத்தார்.
அவன் வேற்றுகிரகவாசி தான் என்றாலும் கூட, எனக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தான். எந்த விதமான எற்ற தாழ்வு மனப்பான்மை இல்லாமல், சக நண்பனாக பழகினான்.என்னிடம் வந்து, “நண்பா, மீண்டும் வருகிறேன்” என்று சொல்லி கிளம்பி சென்றான். மீண்டும் அவன் வரும் நாளுக்காக காத்திருக்கிறேன், அவன் எனக்கு தந்த நினைவு பரிசுவுடன்
முற்றும்.